சேவை எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது: கோவையில் சீமான் பேட்டி

கோவை: சிறுவாணி நீர் விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, உலகமய பொருளாதார கொள்கையை ஏற்றதில் இருந்து சேவை எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது என்ற குற்றச்சாட்டுடன் பதிலைக் கொடுத்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.


கோவை: சிறுவாணி நீர் விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, உலகமய பொருளாதார கொள்கையை ஏற்றதில் இருந்து சேவை எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது என்ற குற்றச்சாட்டுடன் பதிலைக் கொடுத்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கோவை விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

உலகமய பொருளாதார கொள்கையை ஏற்றதில் இருந்து சேவை எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது. கோவையில் தண்ணீர் விநியோகம் பிரான்ஸ் நாட்டிற்கு கொடுத்து இருப்பதில் வியப்பு எதுவுமில்லை. அனைத்தும் வியாபாரமாக்கப்பட்டுவிடும். 

ஆனால், இது பேராபத்தை ஏற்படுத்தும். தமிழர்களின் உரிமையைக் காக்க மத்திய அரசு எப்போதும் துணை நின்றதில்லை. இந்தியாவில் இருந்து தமிழகம் தனித்து இருந்தால் உலகில் வல்லரசு நாடாக மாறியிருக்கும் என்று பொருளாதார மேதை அமர்த்திய சென் கூறினார். மாறாக தமிழகத்தை இராணுவ நிலமாக, வளவேட்டை காடாக மாறிப்போய்விட்டது. 

இந்த மண்ணையும், நாட்டையும் நேசிக்கக் கூடியவர்கள் ஆட்சியில் இல்லை. எட்டு வழிச்சாலையில் பத்தாயிரம் கோடி திட்டம் என்றால் அதில் இரண்டாயிரம் கோடி கமிஷன் கிடைக்கும் என ஆட்சியாளர்கள் அவர்களுக்கான லாபத்தை மட்டுமே பார்க்கின்றனர்.

ஓசூர், நெய்வேலி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் புதிதாக விமான நிலையம் அமைக்க கட்டாயம் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும். பல்வேறு திட்டங்களால் விளைநிலத்தை பிடுங்கி நிலமற்ற கூலிகளாக தமிழர்கள் மாற்றப்படுகின்றனர். நோக்கமற்ற தலைமைகளிடம் அதிகாரம் இருப்பதே இதற்கு காரணம். 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...