கோவை குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

கோவை: கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.


கோவை: கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த போது  வலிப்பு ஏற்பட்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கனமழை காரணமாக கோவையில் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது.

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 9-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கோவை குற்றாலத்தில்  குளிக்க வனத்துறையினர் தடை விதித்ததிருந்தனர். 

இந்த சூழலில், மழை குறைந்ததைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி மீண்டும் கோவை குற்றாலத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். 

உயிரிழப்பு

நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால், அங்கு பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். 

இந்த சூழலில், அருவியில் குளித்து கொண்டிருந்த போது இளைஞர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. 

உடனே, வனத்துறையினர் அவரை பொதுமக்கள் உதவியுடன் வெளியே அழைத்து வந்தனர். 

ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி  உயிரிழந்தவரின் விபரம், அவருடன் வந்ததாக சொல்லப்படும் நபர், சிசிடிவி காட்சிகள், குற்றால அருவி நுழைவாயில் கட்டண பதிவு புத்தகம் ஆகியவை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அருவியில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்ததால் வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...