மேட்டுப்பாளையம் பகுதி நீர்த்தேக்கங்களில் விவசாய மின்வேலிகளை அகற்றும் பணிகள் தீவிரம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் வனவிலங்குகள் நீர் அருந்த வருவதற்கு தடையாக இருந்த மின்வேலிகள் அனைத்தும் முழுமையாக அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் வனவிலங்குகள் நீர் அருந்த வருவதற்கு தடையாக இருந்த மின்வேலிகள் அனைத்தும் முழுமையாக அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளான லிங்காபுரம், காந்தவயல், புதுக்காடு, வால்கரடு, இச்சிப்பாலி உள்ளிட்ட இடங்களில் பொதுப்பணித் துறையினரின் அனுமதியின் பேரில் இப்பகுதி விவசாயிகள் வாழை, காய்கறி பயிர்கள் என பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். 

அணையின் நீர்மட்டம் குறைந்திருக்கும் காலங்களில் இதன் நீர்த்தேக்க பகுதிகளில் விவசாயம் செய்யும் வழக்கம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. அணையின் நீர்த்தேக்க பகுதியில் தேங்கியுள்ள பவானி ஆற்று நீரை அருந்த அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து யானைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம்.

அப்போது யானைகள் மற்றும் மான் போன்ற வனவிலங்குகள் அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க விவசாயிகள் தங்களது சாகுபடி நிலங்களை சுற்றி சோலார் மற்றும் பேட்டெரி மூலம் இயங்கும் மின்வேலிகளை அமைத்தனர். வனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்வேலிகளால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் அருந்த வருவது தடைபட்டுள்ளது, இது இயற்கை சூழலை சீரழிக்கும் செயல் என தனி நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இதனை விசாரித்த நீதிமன்றம் வன உயிரினங்களின் நடமாட்டத்தை தடை செய்யும் மின்வேலிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து வனத்துறை, பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறை என்று என்பது பேர் குழுக்களாக பிரிந்து வனத்தை ஒட்டியுள்ள நீர்த்தேக்க பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலிகளை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். 



இது குறித்து கருத்து தெரிவித்த இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், "வேலிகள் அப்புறப்படுத்தப்படுவதால் இனி யானை, மான் மற்றும் காட்டுப்பன்றிகள் மிக எளிதாக எங்கள் விவசாய பயிர்களை அழித்து சேதப்படுத்திவிடும். மின்வேலிகளை அகற்றும் வனத்துறையினர், இதற்கு பின்னர் யானைகளால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர் சேதங்களை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்." என்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...