கோவையில் அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி : நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

கோவை : மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவை : மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.



வடவள்ளி அருகேயுள்ள பொம்மனம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டில் மூத்த மகன் வேதா சுப்பிரமணியம் பட்டப்படிப்பு முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த போது, பால்காரர் குமார் என்பவர் மூலம் ஈஸ்வர் ராமச்சந்திரன் என்பவரும், மருதமலை அடிவாரத்தில் அருணகிரிநாதர் வழிபாட்டு மையம் என்ற பெயரில் ஜோதிட தொழில் செய்து வரும் குமரசிவம் என்பவரும் அறிமுகமாகியுள்ளனர். 

ஈஸ்வர் மத்திய அரசின் கலால்துறையில் பணியாற்றி வருவதாகவும், அத்துறையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ. 15 லட்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர்கள், பிரதமர், ஆளுநர் போன்றவர்களுடன் விருது வாங்குவது போல புகைப்படங்களைக் காட்டியும், வேலை கிடைக்கவில்லை எனில் பணத்தை திரும்பத் தருவதாகவும் ஈஸ்வர் நம்பிக்கை அளித்துள்ளார். இதையடுத்து, கிருஷ்ணசாமி ரூ. 11 லட்சம் பணத்தை ஈஸ்வரிடம் கொடுத்துள்ளார். 



அதேபோல, சில மாதங்களில் வேதா சுப்பிரமணியத்திற்கு மத்திய கலால் துறையில் நுண்ணறிவு அதிகாரி வேலை கிடைத்தற்கான பணியாணை, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். மேலும், ஒரு வீட்டை மத்திய கலால் நுண்ணறிவு பிரிவு அலுவலகம் எனக்கூறி இதே போல 35-க்கும் மேற்பட்டோருக்கு 6 மாத காலம் பயிற்சியும் வழங்கியுள்ளார். மாத சம்பளமாக அவர்களுக்கு ரூ. 27,760 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் தெரிகிறது. அதன்பின், பணம் வாங்கி வேலை தந்த விவரம் உயரதிகாரிகளுக்கு தெரிந்து விட்டதால், சென்னை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்து விட்டதாக அவர்களிடம் கூறிய ஈஸ்வர், பின்னர் தலைமறைவாகி விட்டார். 

இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது ஈஸ்வர் ராமச்சந்திரனும், குமரசிவமும் மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக போலி அரசு அலுவலகம் நடத்தியும், போலி அரசு ஆவணங்கள் தயாரித்தும் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலி அரசு அலுவலகம் நடத்தி போலி அரசு ஆவணங்கள் வழங்கி ரூ. 11 லட்சம் மோசடி செய்த ஈஸ்வர் ராமச்சந்திரன், குமரசிவம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிருஷ்ணசாமி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

இதேபோல, பட்டதாரி இளைஞர்களைப் பல இடங்களில் ஈஸ்வர் ராமச்சந்திரன் மோசடி செய்திருப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. கோவையில் போலி அரசு அலுவலகம் நடத்தி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட பட்டதாரிகள் மத்தியில் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...