ஆவாரம்பாளையம்-கணபதி மேம்பால பணிகளை தொடங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கோவை: ஆவாரம்பாளையம்-கணபதி இடையேயான மேம்பால பணிகளை தொடங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்ட குழுவினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: ஆவாரம்பாளையம்-கணபதி இடையேயான மேம்பால பணிகளை தொடங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்ட குழுவினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகரையும் கணபதி பகுதியையும் இணைக்கும் வகையில் ஆவாரம்பாளையம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம், அங்கு மேம்பாலம் கட்ட ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து ரயில்வே துறை சார்பில் பணிகள் தொடங்கப்பட்டதால் அந்த சாலை மூடப்பட்டு மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கணபதி சென்று வருகின்றனர்.

ரயில்வே பால பணிகள் சுமார் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் அணுகு சாலை அமைக்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து ஆவாரம்பாளையம் கணபதி ரயில்வே மேம்பால போராட்ட குழு சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அப்போது பேசிய போராட்ட குழு தலைவர் கோபால், "அணுகு சாலை அமைப்பதற்கு 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே பாதையின் இருபுறமும் சுமார் முக்கால் ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்காக 43 பயனாளிகள் நில ஆர்ஜிதம் செய்ய ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளனர். அவ்வாறு ஒப்புதல் வழங்கியவர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படாமலும், நிலம் கையகப்படுத்தாமலும் இருப்பதால் மேம்பால பணிகள் தாமதமாகிறது.

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலம் போல இந்த பாலமும் பணிகள் தாமதமானால் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் தமிழக அரசு விரைந்து மேம்பால பணிகளை செய்ய வேண்டும்." என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...