மந்தாடா விபத்தின்போது சிறப்பாக செயல்பட்ட பொதுமக்களுக்கு எஸ்.பி பாராட்டு

நீலகிரி : 9 பேரை பலி கொண்ட குன்னூர் பேருந்து விபத்தின் போது, மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்களை நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பாராட்டு தெரிவித்தார்.


நீலகிரி : 9 பேரை பலி கொண்ட குன்னூர் பேருந்து விபத்தின் போது, மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்களை நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பாராட்டு தெரிவித்தார். 



கடந்த சில நாட்களுக்கு முன் மந்தாடா குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடத்துநர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது, அருகில் இருந்த பொதுமக்கள், உயிரைப் பொருட்படுத்தாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், விபத்து நடந்த ஒருமணி நேரத்தில் மீட்பு பணிகள் முடிந்தது.



இந்த நிலையில், இந்தக் களப்பணியில் கலந்து கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரையும் பாராட்டிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, இது மகத்தான மனிதாபிமானம் கொண்ட நிகழ்வு என பலரையும் பாராட்டினார். மேலும், இவ்வளவு பெரிய விபத்து நடந்த போதும் அமைதியாக ஆத்மார்த்தமாக அனைவரும் மீட்பு பணிகள் ஈடுபட்டது மிகவும் பாராட்டுக்குரியது என்றார். இதைத்தொடர்ந்து, அவர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திருமேணி, கேத்தி காவல் ஆய்வாளர் விநாயகம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...