பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் செய்தி சேகரிக்கச்சென்ற பத்திரிக்கையாளர்கள் கைது

திருவண்ணாமலை: பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் விவசாயிகள் சங்கம் சார்பில் கறுப்புக்கொடி ஏற்றியதை படம் பிடித்த செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை: பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் விவசாயிகள் சங்கம் சார்பில் கறுப்புக்கொடி ஏற்றியதை படம் பிடித்த செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக பசுமை வழிச்சாலைக்காக நிலம் கைய்யகப்படுத்தும் ஐந்து மாவட்டங்களில் கறுப்பு கொடியேற்றி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி இன்று, இந்த ஐந்து மாவட்டங்களில் விவசாயிகள் அவர்களது நிலங்களில், வீடுகளில், கறுப்புக்கொடியேற்ற முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் பெரும்பான்மையான இடங்களில் மிரட்டி ஏற்ற விடாமல் தடுத்தனர். அதையும் மீறி குறிப்பிட்ட அளவு விவசாயிகள் பயப்படாமல் கறுப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்பு வேங்கிக்கால் பகுதியின் சாலையோரம் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. அதனை கேரளாவின் ‘மாத்ரு பூமி’ தொலைக்காட்சியின் உதவி ஆசிரியர் மாத்ரு பூமி, நிருபர் அனுப்ஜோஷ், ஒளிப்பதிவாளர் முருகன், தீக்கதிர் செய்தியாளர் ராமதாஸ் போன்றோர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது, அங்கு வந்த திருவண்ணாமலை தாலுகா காவல்நிலைய போலீசார் கறுப்புக் கொடியேற்றக்கூடாது என அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை கறுப்புக்கொடி ஏற்ற விடாமல் தடுத்தனர்.

மேலும், இந்த சம்பவங்களை படம் எடுத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களை தடுத்த போலீசார், "கறுப்புக்கொடி ஏற்றுவதை படம் எடுக்கக்கூடாது, செய்தியாக்க கூடாது என்று எங்கள் எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். நீங்கள் அதை மீறியுள்ளதால் உங்களை கைது செய்கிறோம்." என செய்தியாளர்கள் நால்வரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் கடும் டார்ச்சர் செய்துள்ளனர்.



இந்த சம்பவம், கேரளாவில் இருந்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள அதிகாரிகள் உளவுத்துறை மூலம் இந்த விவகாரத்தை கேள்விப்பட்டு கேரளாவைச் சேர்ந்த செய்தியாளர்களை மட்டும் விடுதலை செய்ய கூறியுள்ளனர். அதன்படி, மூன்று பேரும் செய்தி ஏதும் சேகரிக்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டு வெளியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, தீக்கதிர் நிருபர் ராமதாஸ், சி.ஐ.டி.யூ.சி., சங்கத்தைச் சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...