பரளிக்காடு சுற்றுலா மீண்டும் தொடக்கம்; பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பரளிக்காடு சுற்றுலா மீண்டும் தொடங்கியது. அதே போல், வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது.


கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த பரளிக்காடு சுற்றுலா மீண்டும் தொடங்கியது. அதே போல், வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில், இம்மாத தொடக்கம் முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக அணை நிரம்பி பவானியாற்றில் நீர் திறக்கப்பட்டது.

அந்த ஆற்றில் ஏற்பட்ட வெளியேற்றப்பட்ட நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள பரளிக்காடு என்ற இடத்தில் வனத்துறை சார்பில் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக கடந்த 10-ம் தேதி வனத்துறை அறிவித்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக மழையின் அளவு குறைந்து அணையின் நீர்மட்டமும் அதன் நீர்வரத்தும் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டிருந்த சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.



குற்றாலம்







கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மீண்டும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய:-

http://coimbatorewilderness.com/Booking-Baralikadu.aspx

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...