ராமதாஸ் குறித்து விமர்சனம்: தமிழிசையை கண்டித்து கோவையில் பா.மா.கவினர் ஆர்ப்பாட்டம்

கோவை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் எம்.பி., அன்புமணி ராமதாஸ் குறித்து பற்றி தவறாக பேசியதாக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசையை கண்டித்து கோவையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் எம்.பி., அன்புமணி ராமதாஸ் குறித்து பற்றி தவறாக பேசியதாக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசையை கண்டித்து கோவையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தலைவருமான ராமதாசின் சமுகநீதி மற்றும் இடஒதுக்கீடு போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும் மருத்துவர் அன்புமணி ராமதாசை கொச்சைப்படுத்தி கருத்துக்களை பதிவிட்ட கூறி பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பா.ம.க., மற்றும் கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும், போராட்டங்களை கொச்சைப்படுத்திய தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டங்கள் தீவிரமாகும் என்றும் எச்சரித்தனர். 

இப்போராட்டத்தின் போது ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையினர் மறுத்ததையடுத்து காவல்துறையினருடன் பா.ம.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒலிபெருக்கியை பயன்படுத்த காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் ஒலிபெருக்கி பயன்படுத்தாமல் போராட்டம் நடத்தப்பட்டது.



இதே போல், மேட்டுப்பாளையத்தில் பா.ம.க., சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு அக்கட்சியின் மாநில அமைப்பு துணை செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழிசைக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...