ராஜவீதியில் தடை செய்யப்பட்ட 750 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: ராஜவீதியில் உள்ள சந்திரா டிரேடர்ஸ் என்ற கடையில் வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 750 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை: ராஜவீதியில் உள்ள சந்திரா டிரேடர்ஸ் என்ற கடையில் வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 750 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று ராஜவீதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், இன்று காலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜய் லலிதாம்பிகை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு, சந்திரா டிரேடர்ஸ் என்கிற கடையில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் 750 கிலோ தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 750 கிலோ பான் மசாலாக்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் சோதனை மேற்கொண்டனர்.



பின்னர், இந்தத் தடை செய்யப்பட்ட பொருட்கள் எங்கு உற்பத்தி செய்யப்பட்டது. விற்பனைக்காக எங்கு கொண்டு செல்ல உள்ளது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணைக்குப் பின், இந்த பான்மசாலா உற்பத்தியில் இருப்பவர்கள், விற்பனைக்கு வாங்க இருப்பவர்கள் என அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...