கோவை விமான நிலையத்திற்குள் யானை சிலையை கொண்டு செல்வதில் சிக்கல்

கோவை: கோவை விமான நிலையத்தில் நிறுவப்பட இருந்த யானை சிலை அளவில் பெரியதாக இருப்பதால், விமான நிலையத்திற்குள் எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை விமான நிலையத்தில் நிறுவப்பட இருந்த யானை சிலை அளவில் பெரியதாக இருப்பதால், விமான நிலையத்திற்குள் எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 



ஃபைபரால் தயாரிக்கப்பட்ட இரண்டு யானைகளை கோவை விமான நிலையத்திற்குள் நிறுவப்படுவதாக கடந்த மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுற்றுலா வருபவர்களுக்கும், விமான நிலைய பயணிகளின் பார்வைக்கும் படும் வகையில் அந்த சிலைகளை நிறுவ விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது.



அவ்வாறு வந்த யானை சிலை அளவில் பெரியதாக இருந்ததால், விமான நிலைய முகப்பு தடுப்பினை கடந்து செல்ல முடியவில்லை. 



இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ரூ.58 லட்சம் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. யானை மட்டுமல்லாது, நீலகிரி வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள், காங்கேயம் காளைகள், தஞ்சாவூர் பொம்மை உள்ளிட்ட சிலைகள் வைக்கப்படுகின்றன. அதோடு, நீலகிரி மாவட்டத்தின் தொடர் இன மக்களின் வாழ்க்கை முறையை காட்டும் பொருட்கள் இங்கு வைக்கப்படுகின்றன. 



தற்போது இந்த பெரிய யானையின் உருவத்தை விமான நிலைய வளாகத்திற்குள் கொண்டு செல்ல ஆலோசித்து வருகிறோம்." என்றனர். 

தற்போது விமான நிலையம் அருகே வைக்கப்பட்டிருக்கும் அந்த யானை சிலை, நீண்ட நாட்களுக்கு அங்கேயே வைக்கப்பட்டு சேதமடைந்துவிடாமல் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதும், உடனடியாக அதனை நிலையத்திற்குள் கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...