பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் குவியல், குவியலாகக் கொட்டப்படும் குப்பைகள்: நகராட்சி அதிகாரிகள் விரட்டியடிப்பு

திருப்பூர்: திருப்பூரில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் வாகனங்கள் மூலம் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அதிகாரிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர்: திருப்பூரில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் வாகனங்கள் மூலம் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அதிகாரிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதி நகரில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கணபதி நகர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 2014-ம் ஆண்டு, 45 சென்ட் நிலத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க அப்போதைய பல்லடம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேலும், பொழுதுபோக்கு பூங்காவில் ஏராளமான மரங்களும், நடைபயிற்சிக்கென நடைபாதையும் அமைக்கப்பட்டது.



இந்நிலையில், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கடந்த சில நாட்களாக வாகனங்கள் மூலம் பல்லடம் நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி குவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பூங்கா வளாகத்தில் உடற்பயிற்சிக்கூடக் கட்டிடத்தில் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டியதாகவும் தெரிகிறது. இதனால், மிகுந்த துர்நாற்றம் வீசுவதாகவும், காற்று மாசு, சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டு, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குடியிருப்புவாசிகளுக்கு பலவித நோய்பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறிவந்தனர்.



இந்த நிலையில், இன்று காலை பல்லடம் நகராட்சி அதிகாரிகள் பூங்காவிற்கு சென்று குப்பை கொட்டும் பணியை மேற்பார்வையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கணபதி நகர் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டு, அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனையடுத்து, அதிகாரிகளும் வாகனத்தில் ஏறி சென்றுவிட்டனர்.



இதுகுறித்து கணபதி நகர் மக்கள் கூறுகையில்," குடியிருப்பு நடுவில் குப்பைக் கொட்டும் நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் உடனே கைவிட வேண்டும். குப்பைகளை அகற்றிப் பொழுதுபோக்கு பூங்காவாக மக்களின் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம், இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...