அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது - நீலகிரியில் டி.டி.வி.தினகரன் பேட்டி

நீலகிரி: தமிழக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்று நீலகிரியில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி: தமிழக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்று நீலகிரியில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

கோத்தகிரியில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேறக் கழகத்தின் துணை பொது செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான டி.டி.வி.தினகரன் கோத்தகிரிக்கு வந்தார்.



முன்னதாக, டானிங்டன் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்-ன் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக அரசை எதிர்த்து பேசுபவர்கள் மற்றும் விமர்சனம் செய்பவர்களை கைது செய்து அரசு நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் மூலம் பெற்றுக் கொண்ட 19 எம்.எல்.ஏ.,க்கள் உல்லாசமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். அவர் கீழ்பாக்கத்தில் சேர்க்கப்பட வேண்டியவர் என்பதே எனது பதில். நிச்சயம் எங்களுக்கு நீதி கிடைக்கும். அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் போது நிச்சயம் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்." என்று அவர் கூறினார்.​

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...