அண்ணா தொழிற்சங்க பதவியில் இருந்து வேண்டுமென்றே நீக்கம்: முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி குற்றச்சாட்டு

கோவை: அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை வேண்டுமென்றே நீக்கிவிட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை வேண்டுமென்றே நீக்கிவிட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கப் பொதுச்செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி. இவர், கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை வேண்டுமென்றே நீக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- அண்ணா தொழிற்சங்க சட்டவிதிகளின்படி தனக்கு முறையாக எந்தவிதமான விளக்கமும் அறிக்கைகள் வழங்கவில்லை. என்னை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். மேலும், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனில், முறையாக சம்மன் அனுப்பி விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யாமல் விடுவித்துள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டுதான் ஆகஸ்ட் மாதம் மீண்டும் அதே பதவியில் என்னைப் பணியமர்த்தினார். ஆனால், இவர்கள் நான் உறுப்பினராக இல்லை என்று கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு தொழிற்சங்க உறுப்பினர் அல்லாத ஒருவர், எப்படி அந்தப் பதவியில் இருக்க முடியும். அதனால், இவர்கள் கூறுவது முற்றிலும் தவறு. மேலும், கடந்த முறை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, நான் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு ரூ. 4,000 வாங்கிக் கொண்டிருந்தவர்களை ரூ. 12,000 வரை உயர்த்தினேன். எனவே, தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் என்னுடன் தான் உள்ளனர்.

மேலும், நான் தொழிற்சங்க வங்கி கணக்கில் ரூ. 12 மற்றும் ரூ. 18 கோடி வரை சேர்த்து வைத்துள்ளேன். இவர்களால், தொழிற்சங்கத்தை நடத்த முடியாது. எனவே, எண்ணெய் வேண்டுமென்றே அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். நான் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதால், அந்தப் பொறுப்பிற்கு மற்றவர்களை இவர்களால் நியமிக்க முடியாது. எனவேதான், இவர்கள் ஒரு குழு அமைத்து உள்ளனர். நிச்சயமாக அந்த வழக்கு எனக்கு சாதகமாக வரும். தொழிற்சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் என் பக்கம் தான் உள்ளனர். 

தற்போது, டி.டி.வி., தினகரன் அணியில் எனக்கு மீண்டும் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அதற்கு, டிடிவி தினகரனுக்கும், சசிகலாவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...