கூடலூர் பகுதியில் தொடர் கன மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் கோட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், சிற்றாறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தாழ்நிலங்கள் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. கனமழை இடைவிடாது பெய்வதால், கடும் குளிர் நிலவுகிறது. நேற்று காலை நிலவரப்படி, கூடலூரில் 78 மி.மீ மழையும் தேவாலாவில் 107 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

ஓவேலி பேரூராட்சியிலுள்ள பார்வுட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக,  ராட்சதப் பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. ஓவேலி பேரூராட்சிப் பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் அந்த சாலையைச் சீரமைத்தனர்.

மீட்புப் பணிகளை கூடலூர் வட்டாட்சியர் ரவிகுமார் நேரில் ஆய்வு செய்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் மழை காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...