ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புதிய நோய்க்கு சிகிச்சை

ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வியர்த்துக் கொட்டியது. இருதயவலி ஆனால், இருதய அடைப்பாக தெரியவில்லை. அருகில் உள்ள  ஒரு மருத்துவமைனக்கு அழைத்துச் சென்றனர். அந்த பெண்ணிற்கு அங்கு (இசிஜி) எடுத்தபோது, பல வித்தியசமான மாற்றங்கள் இருந்தன. முதலுதவிக்குப்பின் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால், அவ்வப்போது மூச்சு திணறலும் ஏற்பட்டது.

பின்னர்,  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய நோய் பிரிவு ஆலோசகர் டாக்டர்  நந்தக்குமார் பரிசோதனை செய்தார். இருதயத்தின் பெருந்தமனியில் ஒரு வெடிப்பும், அதை சுற்றிலும் ரத்தம் சேர்ந்திருப்பதை கண்டுபிடித்தார். சிடி ஸ்கேன் செய்தபோது, பெருந்தமணியின் பல பகுதிகளிலும் இந்த வெடிப்பு காணப்பட்டது. இந்த சிறிய அளவிலான வெடிப்புகள் ரத்த நாளங்கள் வரை பரவியிருந்தது. பெருந்தமணியில் ஏற்பட்டிருந்த வெடிப்பால், குடல், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளுக்கு ரத்தம் சென்றிருந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு, டாக்டர் தியாகராஜமூர்த்தி தலைமையில் உதவி மருத்துவர்கள் டாக்டர் அருண், டாக்டர் சஜித், டாக்டர் மேனன் உள்ளிட்ட மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இருதயத்தின் பெருந்தமணியில் ஏற்பட்ட வெடிப்பை சரி செய்து ரத்த கசிவை நிறுத்தினர். இதர உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராக செல்ல வழி ஏற்படுத்தினர். இருதய ரத்த நாளத்தில் உள்ள கசிவையும் சரி செய்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய 6.30 மணி நேரம் ஆனது.

அறுவை சிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தாலும், அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பாததால், மோசமாகலாம் என்றே கருதப்பட்டது. ஆனால், படிப்படியாக உடல்நிலை சீராகத் தொடங்கியது. 6 மணிநேரத்துக்குப்பின் மயக்க நிலையிலிருந்து மீண்டார். பின்னர் 10 நாள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார். சரியான நேரத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதால், குணமடைய முடிந்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...