கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி!

கோவையில் வோடபோன் நிறுவனம், புற்றுநோய் விழிப்புணர்வை குறித்த மாரத்தான் போட்டியை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கணபதி ராஜ்குமார் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.



 வோடபோன் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டிகள்  நடத்தி வருகிறது. நேற்று, காலை 5 மணியளில் நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் துவங்கப்பட்டது. இதில் ஆண்கள் , பெண்கள் என  சுமார் 12 ஆயிரத்தி 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க அனுபவமிக்க மூத்த குடிமக்கள், குழந்தைகள் என ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. அதில்,  முதல் பிரிவாக 21 கி.மீட்டரும், இரண்டாம் பிரவில் 10 கி.மீ., மூன்றாம் பிரிவாக 5 கி.மீ., என அமைந்திருந்தது. 21 கி.மீ., போட்டியின்  ‘ ரூட் மேப் ’, நேரு ஸ்டேடியத்தில்  துவங்கி பார்க் கேட் வழியாக, ஹிந்தி அலுவலகம், எல்.ஐ.சி சந்திப்பு, ஹீசூர் சாலை, ரெட்கிராஸ் பில்டிங், கே.ஜி., திரையரங்கம், ரேஸ்கோர்ஸ் பிக்பஜார் வழியாக சுங்கம், காமராஜ் சாலை, என இறுதியில் ஸ்டேன்ஸ் பள்ளி வளாகத்தை அடைந்தது.


  
இது போன்று 10 கி.மீ., மற்றும் 5 கி.மீ., போட்டிகளுக்கும் ரூட் மேப் அமைக்கப்பட்டிருந்தனர்.

போட்டியில் இறுதியில் வெற்றி பெற்ற வீர வீராங்களைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டனர்.

























Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...