ஜெ. உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்பல்லோ மருத்துவமனை


சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று 11-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பீலே மேற்பார்வையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டு வரை பார்வையிட்டார். பின்னர் மருத்துவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இன்று தமிழக அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்றனர். இந்த நிலையில் இன்று இரவு அப்பல்லோ நிர்வாகம், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.



அதில் கூறப்படுள்ளதாவது

அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் Guy's and St. Thomas மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்ட சர்வதேச சிறப்பு மருத்துவரான டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் இருந்து அப்பல்லோ மருத்துவமனை ஆலோசனைகளைப் பெற்று வருகிறது.

டாக்டர் ரிச்சர்ட் பீலே முதல்வரின் உடல்நிலையை ஆராய்ந்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவரது மருத்துவ அறிக்கைகளையும் ரிச்சர்ட் பீலே ஆய்வு செய்தார்.

பின்னர் மருத்துவர்களுடன் ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறை குறித்து அவர் விவாதித்தார். ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்தொற்றை குணப்படுத்த இப்போது ஆண்ட்டிபயாட்டிக்குகளுடன் கூடிய சிகிச்சை முறையை தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...