நவராத்திரி முடிந்தாச்சு, மாநகராட்சிக்கு வேலை வந்தாச்சு..!

தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக நவராத்திரி தினங்களும், விஜயதசமியும் கொண்டாடப்பட்டு வந்தது. இதற்கென மக்கள் அதிகளவில் பழவகைகளை வாங்கி படையலிட்டு வழிபட்டு வந்தனர். இதனால், சாலையெங்கிலும் பழ வியாபாரிகளும், பூ வியாபாரிகளும் அதிகளவில் காணப்பட்டனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையுடன் பண்டிகை தினங்கள் முடிவடைந்ததையொட்டி சாலையோர வியாபாரிகள் விற்பனை ஆகாமல் மீதமான காய்கறிகள், பழவகைகளை சாலையிலேயே கொட்டிச் சென்றனர். மேலும், பல வணிக நிறுவனங்கள் தங்களது கடை மற்றும் நிறுவனங்களின் முன் உடைத்த பூசணிக்காய்கள் அதிகளவில் சாலையில் தேங்கின.

இதனை சுத்தப்படுத்தும் வகையில், மாநகராட்சியின் சார்பில் 20 டன் கொள்ளளவு கொண்ட 4 கண்டைனர் லாரிகள், 10க்கும் மேற்பட்ட திறந்த நிலை லாரிகள், 3 டன் கொள்ளளவு கொண்ட 7 லாரிகள், 5 டன் கொள்ளளவு கொண்ட 15 கண்டைனர், 4 ஜேசிபி என சுமார் 35க்கும் மேற்பட்ட வாகனங்களும், 65க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பூ மார்க்கட், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட பனியில் 225 டன் காய்கறி, பழவகை கழிவுகளை சாலையில் இருந்து அகற்றினர். 

இதுகுறித்து சுகாதார அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த சுத்தப்படுத்தும் பணியில் மத்திய பகுதியில் 32 பணியாளர்களும், மேற்கு மண்டலத்தில் 30 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து, இரவு பகலாக தங்களது பணியினை மேற்கொண்டு வருகின்றனர் என்றார். மேலும், இந்த இயற்கை கழிவு பொருட்கள் மண்புழு உரமாக்கல் ஆலைக்கு அனுப்பப்பட உள்ளது என்றார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...