பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனம்: பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்  விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி  பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.1.34 காசுகளும், டீசல் விலையில் ரூ.2.37 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. விலை உயர்வையடுத்து சென்னையில் ஒரு லிட்டர்  பெட்ரோல் ரூ.66க்கும், டீசல் ரூ.57க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம்,  மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே..வாசன் வலியுறுத்தியுள்ளார். இனிவரும் காலங்களில்  பெட்ரோல், டீல் விலையை நிர்ணயம் செய்யக்கூடிய கொள்கை முடிவை மத்திய அரசே எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...