ஆதரவற்றோர்க்கு உணவளித்து மகிழ்ந்த ''புட் பேங்க்''


கோவையை சேர்ந்த 'புட் பேங்க்' தன்னார்வ தொண்டு அமைப்பு, இன்று (அக். 16) உலக உணவு நாளை கொண்டாடும் விதமாக, நலிந்தோருக்கும் ஆதரவற்றோருக்கும் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்தது.

அதன்படி, அந்த அமைப்பைச்சேர்ந்தோர் கோவை வ.உ.சி. பூங்காவில் திரண்டு, மக்களுக்கு உணவுகளை வழங்கினர். 

இதில் மொத்தமாக 1089 உணவு பொட்டலங்கள், 530 வடைகள், 547 பிஸ்கட் பாக்கெட்டுகள், 50 பாக்கெட் ரொட்டிகள், 50 பாக்கெட் இனிப்புகள், 12 கிலோ பழங்கள், 300 தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகள் சேகரிக்கப்பட்டன.

இந்த உணவுகள் போத்தனூரில் அமைந்துள்ள சத்யா ஜீவன் இல்லம், புளியகுளத்தில் அமைந்துள்ள மெர்சி ஹோம், கவுண்டம்பாளையத்தில் உள்ள கருணை இல்லம், பேரூரில் உள்ள அன்பு இல்லம், அனுகிரஹா அறக்கட்டளை, யுனிவர்சல் அமைதி அறக்கட்டளை, மிஷனரி தொண்டு நிறுவனம், சரணாலயா பெண்கள் இல்லம், தொண்டாமுத்தூர் இல்லம், குழந்தைகள் இல்லம், முதியவர்கள் இல்லம் உள்ளிட்டு ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், வடவள்ளி, ரயில் நிலையம், தடாகம், சாய் பாபா காலனி, பூ மார்க்கெட், காந்திபுரம், பீளமேடு, கே.ஜி.திரையரங்கு மற்றும மருத்துவமனை, கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி, ஒப்பனக்கார வீதி, 5 முக்கு, ரேஸ்கோர்ஸ், சுங்கம், கிராஸ்கட் ரோடு, பவுர் ஹவுஸ், 100 அடி ரோடு, சுக்கர்வார்பேட், வடகோவை, கவுளிப்ரவுன் ரோடு, லாலிரோடு, துடியலூர், நஞ்சுண்டாபுரம், சுந்தராபுரம், குனியமுத்தூர், ரெட் ஃபீல்டு, செல்வபுரம், உக்கடம், லட்சுமி மில், ஹோப்ஸ், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஆசிரமங்களுக்கு வழங்கப்பட்டது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...