'உடனடியாக தற்காலிக உரிமம் வழங்க வேண்டும்' - கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் கோரிக்கை

தீபாவளிக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இதுவரை  பட்டாசு  கடை வைக்க  மாவட்ட நிர்வாகம் தற்காலி உரிமம் வழங்காத்தால்  பட்டாசு கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பட்டாசு வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். 

கோவை மாவட்ட  பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள்  சங்கத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக பேசிய அச்சங்கத்தின் பொது செயலாளர்,  தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு விற்பனைகள் நடைபெறும் , இதுபோன்று  பட்டாசு விற்னை செய்யும் கடைகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாகவே  தற்காலிக உரிமம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆனால் தீபாவளிக்கு  இரண்டு வாரங்களே உள்ள நிலையிலும் பட்டாசு கடை வைக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக உரிமம் வழங்காமல் தாமதித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதானல் பட்டாசு கொள்முதல் செய்து சுமூகமாக வியாபாரம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவித்தவர், உடனடியாக மாவட்ட நிர்வாகம்  தற்காலிக உரிமம் வழங்க  உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார். மேலும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க வணிக வரித்துறையினர் நெருக்கடி இன்றி எளிய முறையில் வணிக வரி உரிமம் கிடைகக் வழி செய்ய வேண்டும் எனவும்  சீன பட்டாசுகளை தவிர்த்து தரமான பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக நாளை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர். 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...