வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டும் பூசாரி- ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கனுவாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி ராஜராஜேஷ்வரி (38). அப்பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது வீட்டின் அருகில் உள்ள கருப்பராயன் கோவில் பூசாரி தொடர்ந்து இவர்களது வீட்டினை காலி செய்யுமாறு மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். இதுகுறித்து ராஜராஜேஷ்வரி கூறுகையில்,

''கனுவாய் பகுதியில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எனக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். எங்களது வீட்டின் கட்டிடத்தில் ஒரு பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளேன். எங்களது வீட்டில் இருந்து சுமார் 30 அடி தூரத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. அங்கு பூசாரியாக மணி என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், எங்களது வீட்டினை காலி செய்துவிட்டு வீட்டினை கோவிலுக்கு தந்துவிடுமாறு அந்த கோவில் பூசாரியும், அவரது மனைவியும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தநிலையில், தொடர்ந்து அவரும், அவரது மனைவியும் கடவுளின் பெயரைச் சொல்லி எங்களது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். வீட்டினை காலி செய்யாவிட்டால் பல அசம்பாவிதங்கள் ஏற்படும் என கூறுகின்றனர். 

இந்த விசயத்தில் உடனடியாக ஆட்சியர் தலையிட்டு கடவுளின் பெயரைக் கூறி மிரட்டி வரும் கருப்பராயன் கோவில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்தினருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு கருப்பராயன் கோவில் பூசாரி மணியே காரணம்'' என கூறினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...