ஹிலாரி கிளிண்டனுக்கு ‘திடீர்’ செல்வாக்கு சரிவு; டிரம்பை விட ஒரு புள்ளியே முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு திடீரென செல்வாக்கு சரிந்துள்ளது. டிரம்பை விட ஒரு புள்ளியே முன்னிலையில் உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 8–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இருவரும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஹிலாரி கடந்த 2009–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டு வரை அமெரிக்க வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தார். அப்போது அவரது தனிப்பட்ட இ–மெயில் முகவரியை அரசு பணிக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு ஆதாரங்கள் அடங்கிய 33 ஆயிரம் இ–மெயில்களை அவர் நீக்கி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) ஏற்கனவே விசாரணை நடத்தியது. இதில் ஹிலாரி மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து விட்டது.

இந்த விவகாரம் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்து வந்தது. இந்த பிரச்சினையை தொடக்கத்திலிருந்தே எழுப்பிய குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிலாரி ரஷியாவுடன் பகிர்ந்து கொண்ட இ–மெயில்களால் அமெரிக்காவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக்கூறியதுடன், ஹிலாரியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பிரசாரம் செய்து வந்தார்.

இதைப்போல இந்த பிரச்சினை தொடர்பாக எப்.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என குடியரசு கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அப்படி ஒரு விசாரணை தேவையில்லை என எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் கொமே சமீபத்தில் கூறி, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார். ஆனால் இந்த விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது.

அதாவது ஹிலாரியின் தனிப்பட்ட இ–மெயில்களை எப்.பி.ஐ. அமைப்பு மீண்டும் ஆய்வு செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்கான அனுமதியை (வாரண்டு) பெற்றுள்ள ஜேம்ஸ் கொமே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். இதற்கிடையே இ–மெயில் விவகாரத்தை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எப்.பி.ஐ.யின் நடவடிக்கைக்கு ஜனநாயக கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த நடவடிக்கையை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ள ஜனநாயக கட்சியினர், இந்த வழக்கில் உள்ள அனைத்து தகவல்களையும் எப்.பி.ஐ. வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஹிலாரியின் இ–மெயில் விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பது, தேர்தலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. முன்னதாக இரு வேட்பாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட நேரடி விவாதம் மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் ஹிலாரியின் கையே ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில் ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கு திடீரென சரிந்துள்ளது. இ-மெயில் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப் போவதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவு நிறுவன இயக்குனர் ஜேம்ஸ் சமீபத்தில் அறிவித்தது ஹிலாரியின் செல்வாக்கு சரிய காரணமாக கருதப்படுகிறது. இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்படும் நிலையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை பொதுமக்களிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் டிரம்பை விட ஹிலாரி ஒரு புள்ளியே கூடுதல் பெற்றுள்ளார்.

ஹிலாரி கிளிண்டனுக்கு 46 சதவீதம் பேரும், டிரம்புக்கு 45 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற நிறுவனங்கள் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் 2 முதல் 3 புள்ளிகளே ஹிலாரி கூடுதலாக பெற்றுள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...