சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது


கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை அடுத்த தம்பிக்கவுண்டர் தோட்டப் பகுதியில் செவ்வாயன்று மர்மநபர் ஒருவர் சந்தன மரத்தினை வெட்டி கடந்த முயற்சித்துள்ளார். அவரைப் பிடித்த பொதுமக்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதனைத்தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் ராமசாமி (23) என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவருடன் சந்தன மரக்கடத்தலில் நாகராஜ் என்பவரும் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து நாகராஜின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் அங்கு பதுக்கிவைத்திருந்த இரு பெரிய சந்தன மரக்கட்டைகளை கைப்பற்றினர். பின், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக, ராமசாமி மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் ஏற்கனவே கோவைப்புதூர் பகுதியில் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...