நாட்டில் வேறு விவகாரங்கள் இல்லாததால் முன்னாள் இராணுவத்தினர் விவகாரத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் குற்றம்சாட்டியுள்ளார்

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமானம் மூலம் வருகை தந்தார். அங்கு அவருக்கு பா.ஜ.கவினர் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியளர்களிடம் பேசிய அவர் கோவையில் கல்வி தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருப்பதாகவும் சென்னையிலும் ஓரு நிகழ்வில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார். அனைவருக்கும் தரமான கல்வி என்பதே பா.ஜ.க வின் கொள்கை எனக்கூறிய அவர் அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது தொடர்பாக தமிழக கல்விதுறை உள்ளிட்ட அனைத்து மாநில கல்வி துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஓரே பதவி ஓரே ஒய்வூதியம் என்ற முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கையை  40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நிராகரித்தாக குற்றம்சாட்டிய அவர் ஆனால் பா.ஜ.க அரசு இந்த திட்டதிற்கு 6500 கோடி ஓதுக்கி இருப்பதாகவும் கூறினார். நாட்டில் வேறு விவகாரங்களை எழுப்ப முடியாது என்பதால் இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் ஜவடேகர் குற்றம்சாட்டினார்.

Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...