ஈராக்கில் தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலி

கிர்குக்: ஈராக்கில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். மேலும், 50 பேர் காயமடைந்தனர். ஈராக்கின் மொசூல் நகரை மீட்பதற்காக அரசு படைகளுக்கும், அதை தக்க வைப்பதற்காக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான சண்டை  நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக் அரசு படைகள் தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் ஈராக்கில் உள்ள திக்ரித் மற்றும் சமரா நகரங்களில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

திக்ரித் நகரின் நுழைவு வாயில் அருகே வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர். இதேபோல் சமரா நகரில் கார் பார்க்கிங்கில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Newsletter

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...