ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் படங்கள் இடம்பெற வேண்டும் - இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்


பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை நிகழ்த்திய உரையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் வங்கிகளில் சென்று பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்குமாறும் தெரிவித்தார்.



பிரதமரின் இந்த திட்டத்தை வரவேற்கும் வகையில் கோவையில் இந்து மக்கள் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து அக்கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பிரதமர் இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளார். தமிழக மக்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏழை மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சாகும் கள்ள நோட்டுகளையும், இந்தியாவில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும் மீட்கும் முயற்சி. மோடி அரசின் இந்த முயற்சி மூலம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. இதை விரும்பாத சக்திகள் பல அவதூறுகளை பரப்பி வருகின்றனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் சுண்டல் மடிப்பத் போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இது அரசை அவமதிக்கும் செயல். அனைவரும் இத்திட்டத்தை வரவேற்போம். சிரமங்களை மக்கள் பொறுத்துக்கொண்டு எல்லோரும் இணைந்து அரசை வலுப்படுத்துவோம்.



இந்தியாவின் அனைத்து தேசிய தலைவர்களின் புகைப்படமும் ரூபாய் நோட்டுகளில் இடம் பெற வேண்டும். லட்சுமி,விநாயகர் போன்ற கடவுள்களில் படமும் இடம்பெற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...

வடவள்ளி, தில்லை நகர் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வடவள்ளி, தில்லை நகர் பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக...

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...