ஏழை, எளிய மக்களின் இல்லக் கனவை நனவாக்கிய அம்மா சிமெண்ட் சிறப்பு குறித்து மக்கள் கருத்து


ஏழைகளின் கனவுகள் நனவாக வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு சலுகை விலையில் ரூ.190-க்கு அம்மா சிமெண்டை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதியன்று அறிவித்தார். அதனடிப்படையில் வீடு கட்டும் பொருட்களில் முக்கியமானதாக விளங்கும் சிமெண்டினை குறைந்த விலையில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் வகையில் அம்மா சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அம்மா சிமெண்ட் விநியோகத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 1500 சதுர அடிக்குள் வீடு கட்டினால் மலிவு விலையில் அதிகபட்சமாக அம்மா சிமெண்ட் 750 மூட்டைகள் வழங்கப்படும். அதாவது 500 சதுர அடி வரை கட்டப்படும் வீடுகளுக்கு 250 மூட்டைகள், 501 முதல் 1000 சதுர அடி வரை கட்டப்படும் வீடுகளுக்கு 500 மூட்டைகள். 1001 முதல் 1500 சதுர அடி வரை கட்டப்படும் வீடுகளுக்கு அதிகபட்சமாக 750 மூட்டைகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வீடுகள் பழுது பார்க்கும் பணிக்கும் 10 மூட்டை முதல் அதிகபட்சமாக 100 மூட்டை வரை வழங்கப்படும். 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் என்ற விகிதாச்சாரப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பெற வீடு கட்டுவதை உறுதி செய்யும் பொருட்டு வீட்டின் வரைப்பட அங்கீகாரம் அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மேற்பார்வையாளர் அல்லது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாலை ஆய்வாளரின் சான்று ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.



கோவை மாவட்டத்தில் இதுவரை புதிதாக வீடுகட்ட மற்றும் இதர பணிகளுக்காக காரமடை ஊராட்சியில் 74721 மூட்டைகள், பெரியநாயக்கன்பாளையத்திம் ஒன்றியத்தில் 32074 மூட்டைகள், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 23130 மூட்டைகள், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 48236 மூட்டைகள், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 87675 மூட்டைகள் என ஒட்டுமொத்தமாக ரூ.12.41 கோடி மதிப்பீட்டில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 331 மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டள்ளது.

இதுகுறித்து இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் தெரிவித்ததாவது:-

எனது பெயர் மல்லிகா, நான் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் சீரப்பாளையம் ஊராட்சியில் வசித்து வருகிறேன். நானும் எனது கனவரும் கூலிக்கு வேலை செய்து வருகிறோம். இதுநாள் வரை ஒட்டு வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம். நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் ‘அம்மா சிமெண்ட்’  வெறும் 190 ரூபாய்க்கு வழங்கி வருகிறார்கள். இது எங்களைப் போன்ற ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கிறது. தற்போது 900 சதுர அடி பரப்பில் வீடு கட்டி வருகிறோம். வீடு கட்டிமுடிப்பதற்கு தற்போது சுமார் 400 மூட்டை சிமெண்ட் தேவைப்படுகிறது. சிமெண்ட் மூட்டை வெளிசந்தையில் வாங்கும் போது ஒரு மூட்டைக்கு சிமெண்ட் ரூ.380 என 400 சிமெண்ட் மூட்டைகளுக்கு மொத்தம் 1 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். ஆனால், தமிழக அரசின் கீழ் மானிய விலையில் விற்கப்படும் சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.190 வீதம் என 400 சிமெண்ட் முட்டைக்கு ரூ.76 ஆயிரம் மட்டுமே செலவாகிறது என்றார்.



தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா சிமெண்ட் திட்டம் மூலம் ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் சுமை வெகுவாக குறைந்துள்ளன. ஏழை, எளிய மக்களின் கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இதுபோன்றத் திட்டம் சிறப்பாகவே திகழ்கிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...