உலக நீரிழிவு தினம் முன்னிட்டு கே.எம்.சி.எச் மருத்துவமனை சிறப்பு முகாம்

உலக நீரிழிவு தினமானது, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைமையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 415 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு அறிக்கையின்படி 5,42,000 சிறுவர், சிறுமியர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த நீரிழிவு நோய் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இந்நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வை 12.11.2016 அன்று கோவை ரேஸ்கோர்ஸ்-ல் நடத்தியது. இதில் அப்பகுதியைச் சார்ந்த மக்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மற்றொரு அங்கமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவர்களால் விவரிக்கப்பட்டது. மருத்துவர்கள் சிவஞானம், கிருஷ்ணன் ஸ்வாமிநாதன், வேலாயுதம் ஆகியோர் விளக்கமளித்தனர்.



இம்முகாமினை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன்  துவக்கி வைத்தார். இம்முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பொது மக்கள் பயன்பெறும் வகையில் இவ்வாறான விழிப்புணர்வு முகாம்களை கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை தொடர்ந்து நடத்தும் என மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார்.



Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...