ஓவியக் கண்காட்சி மூலம் திரட்டிய தொகையை திருநங்கைகளின் கல்விக்காக வழங்கும் திருநங்கை கல்கி


கோவை மாவட்டம், அவநாசி சாலையில் அமைந்துள்ள ஜென்னி கிளப்பில் திருநங்கைகளை நினைவுகூறும் வகையில் ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு ஏற்பாடு செய்திருந்த திருநங்கை கல்கி இதுகுறித்து கூறுகையில்,

என் வாழ்வில் மிகவும் விளையாட்டுத்தனமாக கடந்த மார்ச் மாதம் ஓவியத்தில் தனது பயணத்தை தொடங்கினேன். பின்னர்  மிகவும் தீவிரமாக இதில் நேரம் செலுத்தி ஓவியங்களை வரைய தொடங்கினேன். தற்போது இந்தியா முழுவதும் சில கண்காட்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விற்பனை ஆகும் ஓவியங்களுக்கான தொகையில் ஒரு பகுதியினை திருநங்கைகளின் கல்விக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். தற்போது 2 லட்சம் ரூபாய் வரை திரட்டி திருநங்கையரின் கல்விக்கு உதவப்பட்டுள்ளது.



திருநங்கைகள் தமது பெற்றோர், சமூகத்தினரால் கைவிடப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவது வேதனையளிக்கிறது. ஒவ்வொரு திருநங்கைக்கும் ஒரு கண்ணியமான வேலை கிடைக்கப்பெற வேண்டும். அவர்களுக்கும் கல்வி, திருமணம் போன்ற பல்வேறு கனவுகள் உள்ளது. ஆனால் அதனை அடையமுடியாமல் தவித்து வருகின்றனர்.



இந்த ஓவியக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் எனது ஓவியங்களுக்கான தொகையில் 60 சதவிகிதம் ஆதரவற்ற திருநங்கைக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். இச்சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டு வரும் திருநங்கைகளின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவுவது இந்த கல்வி மட்டுமே தான்'' என்றார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...