முதலமைச்சர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார் என அப்போலோ குழும தலைவர் தகவல்

பிசியோதெரபி சிகிச்சையால் முதலமைச்சர் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, முதலமைச்சர் விரைவில் பூரண நலம்பெற பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கட்சியினரும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வேண்டிக்கொண்டனர். 

மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக முதலமைச்சர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 58 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா, ஐ.சி.யு.வில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, பிசியோதெரபி சிகிச்சையால் முதலமைச்சர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என தெரிவித்தார். 90 சதவிகித நேரத்தில் முதலமைச்சர் சுயமாக சுவாசிப்பதாகவும், எப்போது வீடு திரும்புவது என்பதையும் அவரே முடிவு செய்வார் என்றும் கூறியுள்ளார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...