500, 1000 ரூபாய் தடையைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பிச்சையெடுத்து நூதன போராட்டம்


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து, கோவையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய பாஜக அரசு அறிவித்ததைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, கோவை ஆத்துப்பாலம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி சிலர் வயிற்றில் அடித்தபடி பிச்சையெடுக்கும் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 



மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் சாமானிய மக்களும், தொழிலாளர்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், அன்றாட செலவுகளுக்கு கூட பணம் எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர்கள் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினர். 



இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 160-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...