மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் - உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும், ஜெயலலிதாவிற்கு சொந்தமான சொத்துகளை அரசுடமையாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வழக்கு தொடர உள்ளதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது முறையான சிகிச்சை அளிக்கதாதலேயே உயிரிழந்து இருப்பதாகவும், ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு சொந்தமான 'வேதா இல்லம்' உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டுமெனவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக கட்சி மற்றும் சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டிய அவர், அதிமுக பொதுச்செயலளாராக மூத்த தலைவர்களான பி.ஹெச்.பாண்டியன், பண்ரூட்டி ராமசந்திரன் உள்ளிட்டோரில் ஒருவரை நியமிக்க வேண்டுமென தெரிவித்தார். 

ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மைகளை மறைத்த அப்போல்லா மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மீது சட்ட பூர்வமாக நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும், முறையான சிகிச்சை அளிக்காமல் உயிரிழப்பிற்கு காரணமான சசிகலா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...