துப்புரவு தொழிலாளியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை

கோவையில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் கனகராஜ். இவர் கடந்த சனிக்கிழமை கக்கன் நகர் பகுதியில் துப்புரவு பணி செய்து கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, மாரிமுத்து துப்புரவு தொழிலாளி கனகராஜினை தாக்கிதாக கூறப்படுகின்றது. இதில் காயமடைந்த கனகராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். ஆனால், இதுவரை கனகராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.



இந்நிலையில், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது துப்புரவு தொழிலாளி கனகராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கூட்டத்தினரை கலைந்துபோக சொல்லி காவல் துறையினர் எச்சரித்தும் அவர்கள் காவல் நிலையம் முன்பாக இருந்து போக மறுத்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...