83-வது வார்டு பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 83-வது வார்டுக்கு உட்பட்ட ராஜவீதி மற்றும் சலிவன் வீதி ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குச் செல்லும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, பாலித்தீன் பைகள் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கடையில் 50 மைக்ரானுக்கும் குறைவாக இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்த க.விஜயகார்த்திகேயன் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், சுற்றுப்புரத்திற்கு கேடு விளைவிக்காத பைகளை உபயோகிக்குமாறு கூறினார்.



தொடர்ந்து, 80 மற்றும் 83 ஆகிய பகுதிகளிலிருந்து பெறப்படும் குப்பைகளிலிருந்து பிரித்தெடுக்கும் மக்கும் குப்பைகளின் மூலம் உரம் தயாரிக்கும் மையத்தையும், டி.கே.மார்க்கெட் பகுதியையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, தெலுங்கு வீதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து அதில் மக்கும் குப்பையின் மூலம் உரம் தயாரித்து அவர்களது வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தி வருவதை க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.



இந்நிகழ்வுகளின் போது க.விஜயகார்த்திகேயனுடன், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...