கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.24.60 கோடி மதிப்பிலான ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் மீட்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.24.60 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் கண்டறிந்து விரைவில் மீட்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய 2 தினங்களில் மட்டும் மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.24.60 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், 32-வது வார்டுக்குட்பட்ட விலாங்குறிச்சி, உதயாநகர் பகுதியில் உள்ள பொது  ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான 85 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம் 16-வது வார்டு வடவள்ளி (பேருந்து நிறுத்தம்) இடத்தில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 20 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.



இதேப்போன்று, வடக்கு மண்டலம், 28-வது வார்டு, ஜி.கே.எஸ் நகர் மற்றும் 41-வது வார்டு கணபதி, காந்திமாநகர் ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டும், 28வது வார்டு, சரவணம்பட்டி, மீனாட்சி நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான 50 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.



தொடர்ந்து, தெற்கு மண்டலம், வார்டு- 90, சுண்டக்காமுத்தூர், சரஸ்வதி நகர் கம்யூனிட்டி ஹால் அருகில் சுமார் ரூ.5.60 கோடி மதிப்பிலான 70 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், வார்டு-53, சித்தாபுதூர், பரமேஸ்வரன் பிள்ளை லே-அவுட் அருகில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் சிக்கன் கடை மற்றும் கழிப்பிடத்தை அகற்றப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



ஆகமொத்தம், மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.24.60 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...