சத்துணவு திட்டத்தின் மூலம் 1,57,846 மாணவ மாணவியர்களுக்கு சத்தான கலவை சாதம் வழங்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் தகவல்


சத்துணவுத் திட்டத்துறையின் மூலம் 1294 பள்ளிகளிலும், 1697 அங்கன்வாடி மையங்களிலும் பயிலும் 1,57,846 மாணவ மாணவியர்களுக்கு சத்தான கலவை சாதம் வழங்கப்படுகின்றது என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவியர்களுக்கு வழங்கும் உணவுகளை பரிசோதித்தார். பின்னர் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை உறுதி செய்யும் வகையில் 1982 ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டம் துவங்கப்பட்டது. சத்துணவுத் திட்டத்தில் ஒரே மாதிரியான உணவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருவதை மாற்றி சுவையான உணவினை ஏழை எளிய மக்களின் குழந்தைகள் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் பள்ளிகள் மற்றும் அனைத்து அங்கன்வாடி மையங்களில் பலவகை சாதத்துடன் மசாலா சேர்த்த முட்டை வழங்கும் முன்னோடி திட்டம் முன்னாள் முதலமைச்சரால் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

இதன்படி, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில், திங்கட்கிழமை தோறும் வெஜிடபிள் பிரியாணி மற்றும் மிளகு முட்டையும், செவ்வாய்கிழமை கொண்டைக்கடலை புலவு மற்றும் தக்காளி மசாலா முட்டையும், புதன் கிழமை தக்காளி சாதம் மற்றும் மிளகு முட்டையும், வியாழக் கிழமை சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையும், வெள்ளிக்கிழமை கறிவேப்பிலை கீரைசாதம் மற்றும் மசாலா முட்டை, உருளைக்கிழங்கு பொறியலும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வாரங்களில், திங்கட்கிழமை தோறும் பிசிபேளாபாத் மற்றும் வெங்காயம் தக்காளி மசாலா முட்டை, செவ்வாய்கிழமை தோறும் மீல் மேக்கா, காய்கறிகள் சாதத்துடன் மிளகு முட்டையும், புதன்கிழமை புளிசாதம் மற்றும் தக்காளி மசாலா முட்டையும், வியாழக்கிழமை தோறும் எலுமிச்சை சாதமும், சுண்டல் மற்றும் மசாலா முட்டையும், வெள்ளிக்கிழமை சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டை, உருளைக்கிழங்கு பொரியல் வழங்கப்படுகிறது.

இதேப்போன்று, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் மூலம் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் குழந்தைகளின் சிறப்பம்சம் மற்றும் செரிமான திறன் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

கோவை மாவட்டத்தில் 1294 சத்துணவு மையங்களில், துவக்கப்பள்ளிகள் 773, நடுநிலைப்பள்ளிகள் 269, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 244 மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளிகள் 9 என மொத்தம் 125653 குழந்தைகளுக்கு அனைத்துப்பள்ளி வேலைநாட்களிலும், மேலும் மாவட்டத்திலுள்ள 1697 அங்கன்வாடி மையங்களில் 32,193 குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மசாலா முட்டையுடன் கூடிய சத்தான பல்வகை கலவை சாதம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல் தங்குதடையின்றி முழுமையாக கல்வியைப் பெற்றிடவும், உடல் ஆரோக்கியத்தினை பாதுகாத்திடவும், மிகப்பயனுள்ளதாக சத்துணவு திகழ்கிறது என தெரிவித்த மாவட்ட ஆட்சியர், மாவட்டத்திலுள்ள சத்துணவு மையங்களில் புதிய வகுப்பறையுடன் கூடிய சமையலறைகள், எரிவாயு அடுப்பு அமைக்கும் பணி, புதிய சமையல் பாத்திரங்கள் என பலவகைகளில் நவீனப்படுத்தப்பட்டுள்ளதுடன், போதுமான சமையலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இதுபோன்ற நல்ல திட்டங்களை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தி முழுமையான கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென என கேட்டு கொண்டார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...