வேளாண் பல்கலையில் வளங்குன்றா வேளாண்மையில் நுண்ணுயிர்கள் குறித்து கலந்துரையாடல்

சர்வதேச பயறு வகை பயிர்களுக்கான ஆண்டின் (2016) முக்கிய சிறப்பு நிகழ்ச்சியாக, “வளங்குன்ற வேளாண்மையில் நுண்ணுயிர்கள் - உழவர்கள் சிறப்பு கலந்துரையாடல்” தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் நுண்ணுயிரியல் துறையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கலிருந்தும், 75 உழவர் பெருமக்களும், தமிழக அரசின் வேளாண் துறையில் நுண்ணுயிர் உர உற்பத்தி ஆய்வகத்தில் பணியாற்றும் வேளாண் அலுவர்களும் பங்கேற்றனர்.  



இவ்விழாவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இராமசாமி தலைமையேற்று துவைக்கி வைத்தார். தனது துவக்க உறையில்; பயிறுகளின் முக்கியத்துவம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் தொழில் நுட்பங்கள், வேளாண் விரிவாக்க செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். மேலும் உழவர்களும் மாணவர்களும் இப்பல்கலைகழகத்தின் இருகண்கள் என உழவர்களை முன்னிருத்தி தனது துவக்க உரையாற்றினார். 



பிலிப் விரிவாக்கக் கல்வி இயக்குனர் வாழ்த்துரை வழங்கினார். நவீன உயிர் உர உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் உபயோகிக்கும் முறைகள் பற்றியும் செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் பயிறுவகை பயிர்களுக்கான செறிவூட்டப்பட்ட ரைசோபிய உயிர் உரம் அறிமுகம் படுத்தப்பட்டு, விதை நேர்த்தி, அதை செய்யும் முறை பற்றியும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நவீன உயிர் உரஉற்பத்தி ஆய்வகத்தை நேரில் கண்டு பார்வையிட்டனர்.  இவ்விழாவில் நவீன உயிர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரால் வெளியிடப்பட்டது.

இயற்கை வள மேம்பாட்டு இயக்குனரக தனி அலுவலர் குமார் வரவேற்றார். வேளாண் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் மாரிமுத்து நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...