ஜல்லிகட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தகவல்

ஜல்லிகட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது அவர்கள் கட்சியின் விவகாரம் எனவும் நாளை சசிகலா முதல்வராகவும் முடியும் எனவும் தெரிவித்தார். 

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் ஜனவரியில் தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் ராகுல் காந்தி போன்றோர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.



கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் சரியாக திட்டமிடவில்லை எனவும், தவறு நிதியமைச்சகத்தில் நடந்து இருப்பதாகவும், இதை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு  வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க-விற்கு புதிய செயற்குழு, பொதுக்குழு போன்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக பா.ஜ.க-விற்கு புதிய தலைமை தேவைப்படுகின்றது. வரும் ஜனவரி 6, 7- ஆம் தேதிகளில் தேசியக் குழு நடக்கும் நிலையில் இதை பரீசிலிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், சசிகலாவிற்கு திறமையில்லை என காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்வதாகவும், சோனியா காந்தி என்ன தகுதிகளுடன் அரசியலுக்கு வந்தார் எனவும் ராகுல் காந்தி பட்டப்படிப்பு படிக்கவே இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

ஜல்லிகட்டு போட்டிகளில் இதுவரை எந்த காளைகளும் உயிரிழக்கவில்லை எனவும் தனது வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் வைத்து இருப்பதாகவும், ஜல்லிகட்டு விவகாரத்தில் கட்டுப்பாடுகளுடன் நீதிமன்றம் அனுமதி அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...