புத்தாண்டு கொண்டாட்டத்தில் கோவை!


புதிய வருடம் தொடங்குகிறது என்பதை தாண்டி, புதிதாக பூமியில் பிறந்து விட்டது போன்ற உணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்திவருகிறது புத்தாண்டு. புதிய ஆடைகள், விடுமுறை, நண்பர்களுடன் கொண்டாட்டம், தொலைகாட்சியில் புதிய படம் என்று ஆண்டுதோறும் புதிய வருடப்பிறப்பை திருவிழாவைப் போல கொண்டாடி வருகிறோம்.

கலாச்சாரம்

மேற்கத்தைய கலாச்சாரம், நமது பண்பாடு இதுவல்ல என்று சமூக வலைதங்களில் நெட்டிசங்கள் சக்கைப்போடு போட்டாலும், இறுதியில் அவர்களே ‘அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்று பதிவிடும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் கொண்டாடத்திற்கு இன்றியமையாத ஒரு பண்டிகையாகிவிட்டது புத்தாண்டு. இத்தினத்தை கொண்டாடுவது என்பது நமது கலாச்சாரமாகவே நினைக்கத் தொடங்கி விட்டனர் இன்றைய இளைய தலைமுறையினர். சக மனிதரிடம் மன்னிப்பு கேட்பது தொடங்கி, அன்பை பரிமாறிக்கொள்ள பூங்கொத்து கொடுப்பது, பைக் ரைடு, பார்டி என நீண்டு கொண்டே செல்கிறது கொண்டாட்டங்களின் பட்டியல்.

பூங்கொத்து

பைக்-ரைடு, பார்டி என இளசுகள் சுற்றித்திரியும் இதே நேரத்தில் தான் குடும்பத்தினர் மற்றும் காதலர்கள் தங்களது அன்பையும், காதலையும் பரிமாறிக்கொள்ள பூங்கொத்தை தங்களுக்கு பிடித்தமானவர்களிடம் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர். பூங்கித்து கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தயாரிக்கும் பணியும் கோவையில் சூடுபிடித்துள்ளது. 
உள்நாடு மற்றும் வெளிநாட்டு மலர்களையும் சேர்த்து கண்கவர் வண்ணங்களில் பூங்கொத்துக்களை தயாரிக்கின்றனர். பூங்கொத்தில் இடம்பெறும் முக்கிய மலராக ரோஜா உள்ளது. அதனோடு டேலியா உட்பட பல பூக்களும் சில செயற்கை பூக்களும் வைத்து அழகான பூங்கித்து தயாரிக்கபடுகிறது.

அவினாசி சாலை

ஆரம்பத்தில் தலைநகரங்களில் மட்டும் புத்தாண்டு விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது. இளைஞர் பட்டாளம் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மொத்த நகரை சுற்றிலும் பவனிசெல்வர்.  முந்த நாள் இரவு தொடங்கி புத்தாண்டு தொடங்கிய சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் இந்த கொண்டாட்டம் சமீப காலமாக கோவையின் தோள்களையும் பற்றிக்கொண்டது.
கோவை மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் முக்கிய சாலையாக அவினாசி சாலை உள்ளது. இங்கு தான் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படும். படு வேகமாக தங்களது வாகனகளை இயக்க நேர்த்தியான சாலையாக அவினாசி சாலை இருப்பதால் பல இளைஞர்கள் தங்களது பைக் ரைடு-க்கு இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். 

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

குடிபோதையில் சிலர் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் செல்கின்றனர். இதனால் புத்தாண்டு தினத்தில் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்ற. இதை தடுக்க கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக 22-க்கும்  மேற்பட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு மையங்களை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மேலும், குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அந்தந்த இடங்களிலேயே அமரவைத்து, மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.
நம்மை சுற்றிலும் பலத்த பாதுகாப்புகள் இருந்தாலும், ஆபத்துக்களும் அதே அளவில் உள்ளன. அதனால், மிகுந்த கவனத்துடன் இந்த புத்தாண்டை கொண்டாடலாம். இன்னும் பார்க்க வேண்டிய புத்தாண்டுகள் நிறையவே உள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...