ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள்


ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழர்கள் உணர்வை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என கோசங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.



தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசலில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உடனடியாக ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். இல்லையென்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம். அப்போது, காவிரி பிரச்சனையில் அமைதியாக இருந்தது போல் மத்திய அரசு மவுனம் காக்க வேண்டும் என தெரிவித்தனர். 

மேலும், சிங்கத்தை அடக்கக் கூறிய நீதிபதியை, வீடுகளில் சிங்கம் வளர்க்க அனுமதி கொடுத்தால் தாங்கள் சிங்கத்தை அடக்க தயார் எனவும், அனைத்து கிராமங்களிலும் சிங்கத்தை வளர்த்து அடக்கிக் கொள்கிறோம் எனவும் தெரிவித்த அவர்கள் தமிழகர்கள் உணர்வை புரிந்து கொள்ளாமல் பேசும் பேச்சை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...