தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தேனீ வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், ஜனவரி மாதத்திற்கான பயிற்சி வரும் ஜனவரி 6-ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது.

1. தேனீ இனங்களை கண்டுபிடித்தல்

2. பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம்

3. தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல்

4. அதிகரிக்கும்  பயிர்களின் விவரம்

5. தேனைப் பிரித்தெடுத்தல்

6. தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம்

பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாள் அன்று காலை 9 மணிக்குள்ளாக வேளாண் பூச்சியியல் துறைக்கு வர வேண்டும். பயிற்சி கட்டணம் 250 ரூபாய் வசூலிக்கப்படும் . பயிற்சி நேரம் காலை 10 முதல் மாலை 5 மணிவரை ஆகும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

இணையம் மூலம் பயிற்சி கட்டணத் தொகையை செலுத்த முறைப்படி வங்கி கணக்கு எண் 30078485742, TNAU கிளை, பாரத ஸ்டேட் வங்கியில் வரைவோலை மூலம் முன்கூட்டியே செலுத்தி இரசீது நகல் எடுத்து வர வேண்டும். அல்லது, பயிற்சித் தொகையினை பயிற்சி நாளன்றும் ரொக்கமாக செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை - 641 003 என்ற முகவரியிலோ அல்லது 0422-6611214 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...