தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மேற்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையரிடம் மனு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டம் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் ஐந்து மண்டலங்களிலுள்ள உதவி ஆணையர்களின் மேற்பார்வையில் நடமாடும் மக்கள் குறைதீர் வாகனம் ஐந்து மண்டலங்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை செயல்படுகிறது.

மேலும், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாகனமானது தொடர்ந்து ஐந்து மண்டலங்களிலும் சென்று தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுவரும்.

மேலும், ஐந்து மண்டலங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 

அதனடிப்படையில், மேற்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டம் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைத் தொட்டிகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், அடிப்படை வசதி என பல்வேறு உதவிகள் கோரி 14 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளி ஒருவர் மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள மாநகராட்சிப் பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை வைப்பதற்காக கோரிக்கை மனுவும் அளித்தார். 

இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், உதவி ஆணையர் கே.ராமைய்யா, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...