ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி அழைக்காமல் ஒன்று சேர்ந்த கோவை மக்கள்


தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் உள்ளிட்டு பல்வேறுகட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வருகிறது.



இதனிடையே, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளையதலைமுறை என்னும் தன்னார்வ அமைப்பினர் 10 பேர், கோவை வ.ஊ.சி மைதானத்தில் இன்று "நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்" "I Support Jallikattu" போன்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை கையில் ஏந்தியவாறு அமர்ந்தனர்.



இதைக்கண்ட அப்பகுதியில் இருந்தோர் தாங்களும் ஜல்லிக்கட்டுக்கு விருப்பத்தை தெரிவிப்பதாகக் கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் யாரும் அழைக்காமல் அமர்ந்து ஆதரவு தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவிநாசி சாலையில் பேரணியில் ஈடுபட்டனர். பின், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அனுமதியின்றி இதுபோன்ற பேரணியில் ஈடுபடக் கூடாது என கூறியதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.



இதுகுறித்து, இளையதலைமுறை தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோகுல், நமது நிருபரிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு. பல்வேறு காரணங்களுக்கு இதற்கு அரசாங்கமும், நீதிமன்றமும் தடை விதித்து வருகிறது. வரும் பொங்களன்றும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பில்லை. மக்கள், நாமாக ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டினை நடத்தி பாரம்பரியத்தை நிலைநாட்ட வேண்டும்" இவ்வாறு கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...