மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் வடவள்ளியில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டு பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் துவக்கம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேற்கு மண்டலம், வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக நுழைவாயிற் பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புக் கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள்  அகற்றப்பட்டு புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் இன்று நடைபெற்றது.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளியில் பேருந்துகள் நிறுத்துமிடம் உள்ளது. பேருந்துகள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால், உத்தேச பேருந்து திருப்புமுனையம் போதுமான வகையில் பேருந்துகள் இடையூரின்றி நுழையும் வசதி மற்றும் வெளியேறும் வசதி ஏற்படுத்தும் வகையில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து கடந்த 6.1.2017 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமையும் நுழைவாயிற் பகுதியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் சர்வே செய்து அப்புறப்படுத்தவும், பேருந்துகள் நுழைவுப் பகுதியிலுள்ள மிகப்பழமையான கழிப்பிடங்களையும் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான சிறு கடைகளையும் அகற்றி மாற்று ஏற்பாடு செய்தும், பேருந்து நிலையம் உள்பகுதியில் நுழைய இடவசதி ஏற்படுத்தும்படியும் திட்டமிட்டு, வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் வரைவில் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தோம்.

அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக இன்று மேற்கு மண்டல உதவி ஆணையர் கே.ராமைய்யா, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக நுழைவாயிற் பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புக் கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் காவல்துறை உதவியுடன் மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு அகற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக முதற்கட்ட ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...