மேயர் மற்றும் ஆணையாளர் கோவையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர்

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். குளம் தூர்வாருதல், மழைநீர் வடிகால் அமைத்தல், பாதாள சாக்கடை புதுப்பித்தல் போன்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.


கோவை: கோவை மாநகராட்சியின் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.



கிழக்கு மண்டலத்தில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் தூர்வாருதல் மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மேயர் மற்றும் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டனர்.



அதே மண்டலத்தில் உள்ள சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில் கூடுதலாக 32-HP மின் மோட்டார்கள் அமைக்கப்படும் பணியையும் ஆணையாளர் பார்வையிட்டார்.



மத்திய மண்டலத்தில், திருச்சி சாலை ராமநாதபுரம் சந்திப்பு பகுதியில் பழுதடைந்த பாதாள சாக்கடையின் பழைய பிரதான குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் பதிக்கும் பணியை ஆணையாளர் ஆய்வு செய்தார். இப்பணி நவீன முறையில் (Trench Less Method) மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.



அதே மண்டலத்தில் உள்ள திருச்சி சாலை நிர்மலா கல்லூரி பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியையும் ஆணையாளர் பார்வையிட்டார்.



மேற்கு மண்டலத்தில் உள்ள சிவானந்தா காலனி ரயில்வே பாலம் அருகில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் சுமார் 18 மீட்டர் நீளத்திற்கு வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறுபாலம் அமைக்கும் பணியையும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுப் பணிகளில் கிழக்கு மண்டல குழுத்தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் ஆதிமகோஸ்வரி, சிங்கை சிவா, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், உதவி ஆணையர் துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, மாமன்ற உறுப்பினர் பேபிசுதா, உதவி பொறியாளர் ஹரிபிரசாத், பாலச்சந்தர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...