கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.


கோவை: கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அண்மை காலங்களில் கல்வி நிறுவனங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் அடிக்கடி அரங்கேறுகிறது. இதனால் காவல்துறையினர் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாட்டை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

நேற்று இரவு சுமார் 10:30 மணியளவில் கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் இன்று அதிகாலை வரை விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையின் முடிவில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வெறும் வதந்தி எனக் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வதந்தி பரப்பி அச்சத்தை ஏற்படுத்தும் நபர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...