பணிபுரியும்‌ பெண்கள்‌ எதிர்கொள்ளும்‌ பாலியல்‌ வன்முறை குறித்து விசாரிக்க உட்புகார்குழு அமைக்காத நிறுவனங்கள்‌ மீது நடவடிக்கை - கோவை மாவட்ட ஆட்சியர்‌

கோவை: பணிபுரியும்‌ பெண்கள்‌ எதிர்கொள்ளும்‌ பாலியல்‌ வன்முறை தடைசட்டம்‌ 2013-ன்‌ படி விசாரிக்க உட்புகார்குழு அமைக்கப்படாத நிறுவனங்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌ என கோவை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்‌.

கோவை: பணிபுரியும்‌ பெண்கள்‌ எதிர்கொள்ளும்‌ பாலியல்‌ வன்முறை தடைசட்டம்‌ 2013-ன்‌ படி விசாரிக்க உட்புகார்குழு அமைக்கப்படாத நிறுவனங்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌ என கோவை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது;-

மத்திய மற்றும்‌ மாநில அரசுகள்‌ பெண்களின்‌ பாதுகாப்பிற்காக பலதிட்டங்கள்‌ மற்றும்‌ சட்டங்களை இயற்றியுள்ளது. அதன்படி பணிபுரியும்‌ இடங்களில்‌ பெண்கள்‌ எதிர்கொள்ளும்‌ பாலியல்‌ வன்முறைகள்‌ தடுப்பதற்காக “பணிபுரியும்‌ பெண்கள்‌ எதிர்கொள்ளும்‌ பாலியல்‌ வன்முறை தடைசட்டம்‌ 2013” ஆண்டு முதல்‌ மத்திய அரசால்‌ நடை முறைப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தில்‌ பணிபுரியும்‌ பெண்கள்‌ எதிர்கொள்ளும்‌ பாலியல்‌ வன்முறை குறித்து விசாரிக்க உட்புகார்குழு அனைத்து அரசுத்துறைகள்‌ மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்களில்‌ அமைக்கப்பட வேண்டும்‌ எனவும்‌, அவ்வாறு அமைக்கப்படும்‌ உட்புகார்குழுவின்‌ தலைவராக ஒரு பெண்‌ அலுவலரே நியமிக்க வேண்டும்‌ எனவும்‌, இரண்டு நபர்களை உறுப்பினர்களாகவும்‌, இத்துறையில்‌ நன்கு பழக்கமான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும்‌ எனவும்‌ உத்தரவிடப்பட்டும்‌ விசாரணைக்கான வழிமுறைகள்‌ வகுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ மாவட்ட சமூகநல அலுவலர்‌ மற்றும்‌ 3 பெண்‌ உறுப்பினர்களை கொண்ட மாவட்ட அளவிலான குழு(Local Complaints committee) மற்றும் ஒவ்வொரு மாநகாட்சி, நகராட்சி ஒவ்வொரு வட்டாரம்‌ மற்றும்‌ தாலுக்காவிலும்‌ பணியாற்றும்‌ அலுவலர்களை தங்கள்‌ பணி எல்லைக்குட்பட்ட பகுதிகளில்‌ பெறப்படும்‌ புகார்‌ தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்‌ பொருட்டு ஒருங்கிணைப்பு அலுவலர்கள்‌ குழு (Nodal Officer) 17.5.2017 அன்று அமைக்கப்பட்டுள்ளது. 10 பேருக்கும்‌ குறைவாக உள்ள இடங்களில்‌ பணிபுரியும்‌ பெண்கள்‌ பாலியல்‌ வன்முறையால்‌ பாதிக்கப்பட்டால்‌ மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ உள்ள குழுவிலோ அல்லது அந்த பகுதிக்குட்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலரிடமோ புகார்‌ அளிக்கலாம்‌. புகார்‌ அளிக்கும்‌ நபரின்‌ விபரம்‌ ரகசியமாக வைக்கப்படும்‌. கோவை மாவட்டத்தில்‌ இதுவரை பெயர்‌ மற்றும்‌ முகவரி குறிப்பிடாமல்‌ 3 புகார்‌ மனுக்கள்‌ பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்‌ பாதிக்கப்பட்ட பெண்கள்‌ புகார்‌ அளிக்கும்‌ வகையில்‌ மத்திய அரசு www.shebox.nic.in என்ற இணையதளம்‌ உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும்‌ பாதிக்கப்பட்ட பெண்கள்‌ புகார்‌ அளிக்கலாம்‌. www.shebox.nic.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ கோவை மாவட்டத்தில்‌ இதுவரை 4 புகார்‌ மனுக்கள்‌ பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில்‌ அனைத்து அரசு துறைகளிலும்‌ உட்புகார்‌ குழு (Internal complaint committee) அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று தனியார்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களில்‌ 37 உட்புகார்‌ குழு அமைக்கப்பட்டுள்ளது அனைத்து துறைகளிலிருந்தும்‌ காலாண்டு அறிக்கை பெறப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில்‌ ஒருங்கிணைந்த சேவை மையம்‌ உதவி எண்‌ 181 (One stop center) இதுவரை 2 புகார்‌ மனுக்கள்‌ பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குழுவில்‌ பெறப்படும்‌ புகார்களின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்‌ பொருட்டு புகார்தாரர்கள்‌ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நபர்கள்‌ குறித்து தெளிவான முகவரியுடன்‌ புகார்‌ அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசு மற்றும்‌ அனைத்து தனியார்‌ நிறுவனங்களின்‌ தலைமை அலுவலகங்களிலும்‌ உட்புகார்‌ குழு அமைத்தும்‌, பாதிக்கப்பட்ட பெண்கள்‌ புகார்‌ அளிக்கும்‌ வகையில்‌ உட்புகார்‌ குழு விபரம்‌ மற்றும்‌ மத்திய அரசால்‌ இணையதளத்தில்‌ புகார்‌ அளிக்கும்‌ வகையில் www.shebox.nic.in என்ற இணையதளம்‌ உருவாக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தினை அனைவரின்‌ பார்வைக்கு படும்படியாக ஒட்டிவைக்க வேண்டும்‌ எனவும்‌, மேற்கண்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி அதன்‌ விபரத்தினை மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக தெரிவிக்குமாறும்‌,உட்புகார்‌ குழுவின்‌ மாதாந்திர அறிக்கையினை ஒவ்வொரு மாதமும்‌ மாவட்ட சமூகநல அலுவலர்‌ கோயம்புத்தூர்‌ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்‌. உட்புகார்‌ குழு அமைக்கப்படாத நிறுவனங்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌ எனவும்‌, உட்புகார்‌ குழு அமைப்பது தொடர்பான விபரங்களை மாவட்ட சமூகநல அலுவலகம்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌, கோயம்புத்தூர்‌ தொலை பேசி எண்‌ 0422-2305126 மற்றும்‌ பெண்கள்‌ உதவி மையம்‌ என்‌. 0422-2555126 என்ற முகவரியில்‌ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

Newsletter