பொங்கல் பண்டிகை: கோவையில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்; கொடிசியா வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பு..!

கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி, பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது, என கோவை போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி, பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது, என கோவை போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பொங்கல் பண்டிகையையொட்டி சிங்காநல்லூர் பஸ் நிலையம் மற்றும் கோவை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டம் சார்பில் கொடிசியா வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த தற்காலிக பஸ்நிலையம் வருகிற 12-ம்தேதி முதல் 14-ம் தேதி வரை செயல்படும். அங்கு இருந்து சேலம், திருச்சி மற்றும் அதை கடந்து செல்லும் ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி இங்கு இருந்து சேலம் மற்றும் திருச்சிக்கு கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தற்காலிக, பஸ்நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு தனி இடம், கழிவறை, குடிநீர், மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தற்காலிக பஸ் நிலையத்துக்கு வருவதற்காக நகரின் பல்வேறு இடங்களில் இருந்து இணைப்பு டவுன் பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter